Pages

கிராமத்துக் காதலி

பணிக்காக பட்டணம் பயணப்பட்டவன்...
பண்டிகைக்காக மட்டும்
சொந்தக் கிராமம் நோக்கி பயணிக்கிறேன்...

பேருந்தில் ஏறி ஜன்னலோர
இருக்கைத் தேடி அமர்ந்து...
ஜன்னலின் திரைச்சீலை விலக்கினேன்..
தானாகவே விலகிக் கொண்டது
கூடவே எனது மனத்திரையும்.....

 ஏதோ சத்தம் கேட்டு
வெளியில் எட்டிப் பார்த்தேன்...
ஒரு குட்டி தேவதை
மிளிரும் புன்னகையோடும்,
மழலை பேச்சோடும்,
தன் தாயின் விரல் பிடித்து
நடக்கும் காட்சியை கண்டேன்....

அது பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டும்
காட்சிதான் எனினும், வேகமாக முகம் திருப்பி,
இருக்கையில் சாய்ந்தேன்..!!!!!

பேருந்து முன்னோக்கியும்,
நினைவுகள் பின்னோக்கியும்,
ஒருசேரப் பயணப்பட்டது....!!!!

அந்த பிஞ்சு மழலையின் பேச்சு,
உன்னுடனான ஆரம்பக்கல்வி
காலங்களை நினைவு படுத்த
அதில் மூழ்கியபடி கண் அயர்ந்தேன்..

வெளியில் மீண்டும் சத்தம்
என்னவென்று கதவு திறந்தேன்...!!!!
மேகத்தோடு தென்றலும்,
என் இதயத்தோடு உன் நினைவுகளும்,
ஒரு சேர மோதி இரு வேறு துளியாய்
வெளிப்பட்டது வெளியில் மழையாகவும்,
விழியில் கண்ணீராகவும்....

ஒன்று உனக்கு பிடித்த மழை,
மற்றொன்று எனக்கு பிடித்த உன் நினைவுகள்..
எனவே இரண்டையும் ரசித்தபடி,
பயணம் தொடர்ந்தது.....!!!

உயர்க்கல்வியில் உடைந்த நம்நட்பு
கல்லூரியிலும் கை கூடாமல்
போனதை நினைத்து கொண்டும்,

சில வருடம் பார்க்காமலும்,
பல வருடம் பேசாமலும்,
கடந்த போன நாட்களின்
வறட்சி கண்களில் மீண்டும் நீர் வார்க்க,
சுகமான பயணமும் முடிவுக்கு வர...,

கீழிறங்கி பார்வை வீசினேன்....
கண் அளக்கும் தூரத்தில் எப்போதும்போல.....
உன் சாயலில் ஒரு பெண் முகம் தெரிய
நடையை தொடர்கிறேன்....
அது நீயாக இருந்து விட மாட்டாயோ?
என்ற கேள்விக்குறியோடும்? எதிர்பார்ப்போடும்?
உன் மீதான அதே பழையக் காதலுடன்....!!!!!!

No comments:

Post a Comment