தேவதையே...
தலைக்குக் குளித்துவிட்டு
கூந்தல் உலர்த்த மொட்டை மாடி
போகாதே என்றால் கேட்கிறாயா......
அங்கு பார் வான் மேகமெல்லாம்
ஈடு கொடுக்க முடியாமல்
எப்படி கலைந்து போகிறதென்று..!!!!!!
பூமகளே..
பூப்பறிக்க சென்ற நீ
மல்லிகையை மட்டும்
பறித்து விட்டு, திரும்பி விட்டாயாம்.....
அங்கு பார் ரோஜாக்களெல்லாம்.....
சோகத்தில் எப்படி சிவந்து கிடக்கிறதென்று..!!!!!
புன்னகை பூவே,
உன் வீட்டு மழலைக்கு
சோறூட்ட வெளியில் வந்து நீ
நிலவை புன்னகைத்தபடி
அழைக்காதே என்றால் கேட்கிறாயா....
அங்கு பார் உன் புன்னகைக்கு
ஈடு கொடுக்க முடியாமல் நிலவு மேகத்துக்குள்
மறைந்து கொண்டு முகம் காட்ட அஞ்சுவதை...!!!!!
மஞ்சள் நிலவே,
பனி விழும்...
மார்கழிக் காலையில் வாசல் தெளித்து
நீ போட்ட மாக்கோலம்...
உன் விரல் தொட்ட ஸ்பரிசத்திற்காகவா
இப்படி சிரிக்கிறது இந்த விடிந்த விட்ட காலையில்..!!!!
பொன் ரதமே...
நீ காலணி அணிந்து நடப்பதால்...
உன் மலர் பாதங்களை தாங்க முடியாத....
ஏக்கத்தில் இப்பூமி எப்படி கொதித்துப்போய்
கிடக்குது பார்..!!!!
புத்தம் புது தென்றலே...
புடவை கட்டி நீ கோவிலுக்கு போகும்
ஒவ்வொரு நாளும் குழம்பிப்போகிறார்கள்
பூசாரி முதல் பக்தர்கள் வரை அனைவரும்
உள்ளிருப்பது அம்மனா....!!! இல்லை
வழிபடும் நீ அம்மனா என்று....!!!!!
No comments:
Post a Comment