அரிதாகவே நேர்கின்றன
உன்னை மறந்திருக்கும்
தருணங்கள்...
நீயற்ற பொழுதிலும்
கவிதை, பூ, ஓவியம்
ஏதேனும் ஒன்றிலிருந்து
நகைக்கிறாய்...
பேருந்து, திரையரங்கு, கடைவீதி என்று
எங்கேனும் ஒருத்தி
உன் சாயலில் தென்பட்டுவிடுகிறாள்...
யாரோ யாரையோ அழைக்கும்போது
என் நினைவின் வாசலில்
நீ வந்து நிற்கிறாய்...
(அது உன் பெயராக இருக்கும் பட்சத்தில்)
உன் பெயரை ஒற்றிக்கொண்டு
ஏதேனும் ஒரு வாகனம்
என்னை கடந்து செல்கிறது...
உன் பெயரில்
எங்கேனும்
ஒரு திரையரங்கு இருந்துவிடுகிறது...
உன்னை நியாபகபடுத்ததும் விதமாகவே
எல்லாம் நிகழ்கின்றன...
உன்னை சுற்றிய களைப்பில்
ஓய்வெடுக்கும் கண்களை
உறக்கத்திலும் வந்து இம்சிக்கிறாய்...
உன்னை கடந்து பயணிக்க
ஒருபோதும் முடியவே இல்லை...
முச்சறுந்த காலவெளியில்
நிகழ கூடும் என் பயணம்
உன் நினைவுகளுக்கு அப்பால்...
No comments:
Post a Comment