Pages

" ப்ரிய சகி "

" ப்ரிய சகி "
அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நனயணக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே...
~பட்டர்

வேறு :

இறுகப்பற்றின இருகைகளின் கொள்ளாமையால்
சிந்தவிட்ட நினைவுகள்
கால்வழியூர்ந்து கழுத்தை நிரைக்கிறது
கண்மணி.........

கடலின் நிழல் வீழுங்காயலில்
ஒரு காலை தூக்கித்தவஞ்செய்யுமொரு
சிறு கொக்காய் காத்திருக்கிறேன்...
நடக்கவொண்ணா மென்பாதங்களை
அறிந்தெடுத்து,
திருவுடலை திரு வோடாக்கி
வேண்டி வருந்துகையில்...

இது கேள்..!
நீ யென் யாசகம்.
பவதி பிச்ஷாந்தேஹி....!


ஏற்ற வற்றங்காணு மென்ணிமை பரப்பை
இழுத்துச்சுருக்கும் இரவினுக்கு
பருவச்சிறகை பரிசளிக்கிறேன்...!
ஆடைகளற்ற சுய தரிசனத்தை
பரிமாற்றி பெருயேப்பம் விடுகையில்
இதை சொல்வேன்..

.................................... சகி
நீ யென் சுயவின்பம்..!


சமாதியில்,
இடம் விட்டு படுத்திருக்கும் காலத்திற்கு
நீ முத்தமிட்ட காற்றை அனுப்பினேன்
முத்தங்களை வாங்கி~பின்
வளி வழி வலியனுப்பியது..
இவ்வாறு சகி.,

என்வானில்
தினமிரவில் நிகழுமோர்
சூரிய தற்கொலை..

இன்னதாவது..

நீ யென் கர்மா
ஊழ்'ன் வழியது வாழ்வு..


கானலின் சலனமாய் காண வாய்க்கிறாய்
எமபதியின் கொம்பிலமரும் காக்கையென
எத்தனிக்குங் காலத்திற்கு
பதில் கூற வேண்டியிருக்கிறது..

பத்திரப்படுத்திய மன்மத கணைகளால்
ஊடறுக்கிறேன்..

பிளந்த மாரினுள் நுழைந்து பார்..
உள்ளுருளும் வொன்றிற்கு.,
உன் பேர்...!

நீ யெனது இன்னுயிர்...!

ப்
ரி

ச கி..!!

No comments:

Post a Comment