காதல் கவிதை | RJ Malar | Trending
அவளின் நினைவுகள் I Ishu I Trending Memories
அவளின் நினைவுகள்
என் மனம் என்னும் சிப்பிக்குள்
முத்துபோல் சேமித்து வைத்தேன்
அவளின் நினைவுகளை
For more videos Subscribe My channel
https://bit.ly/3iJ8QRxஎன் வாழ்க்கை பிரகாசமாய்
ஒளிரும் என்று நம்பியிருந்தேன்
ஆனால் - இன்றோ
நான் சேர்த்து வைத்த நினைவுகள் எல்லாம்
என்னை சேதப்படுத்துகிறது
பேருந்தின் ஜன்னலோர பயணத்தில்
கார்மேகம் பொழியும் மழையை கூட ரசிக்க முடியவில்லை
மேகம் கடந்து மழை துளி நின்ற போதிலும்
காலம் கடந்த உன் நினைவுகள்
கண்ணீர் துளியாய் சிந்துகிறது
உன்னோடு பயணம் செய்த
நாட்களை நினைக்கும் போது
உன் நினைவுகளின் வலியால்
நான் துடிக்கிறேன்
மரிக்கிறேன்...
முயற்சி | Hard work | RJ Suba.J
முயற்சி | Hard work
Self Confidence | தன்னம்பிக்கை வரிகள் | RJ Malar Trending
Self Confidence | தன்னம்பிக்கை வரிகள்
உனக்குள் இருக்கும் திடகாத்தமான ஆற்றலை வெளிக்கொணர வேண்டி வாழ்க்கை சோதிக்கும் இந்த பரீட்சையில் வெல்வதும் வீழ்வதும் என்றுமே உன் கையிலே…
நம்பிக்கை இருக்கும் மனதில் அச்சம் எழாது..! தன்னம்பிக்கை கொண்டவனின் கைகள் உழைக்க தயங்காது…!
ஒருவர் உன்னை மதிப்பதால் நீ பெரியதாகிவிடப்போவது இல்லை..! உன்னை இகழ்வதாலும் நீ சிரியதாகிவிடமாட்டாய்..! எனவே என்றுமே நீ நீயே என்பதை வாழ்க்கையில் புரிந்து கொள்…!
எதிலுமே சரிசமமாக இருக்க பழகிக்கொள்… அளவுக்கு மீறின கோபமும் நல்லது அல்ல அளவில்லாத பொறுமையும் உன்னை கொல்லும் மெல்ல… எதுவும் ஒரு அளவுக்கே…!
உடம்பு சரி செய்ய உதவும் ஊசி கூட குத்தினால் வலிக்கும் என்கிறபோது உன் வாழ்க்கையை சரி செய்ய நீ கஷ்டப்பட்டு உழைத்தே ஆக வேண்டும்…
நல்லதோ? கெட்டதோ? அனுபவங்களை நீ பெற்றால் மட்டுமே இங்கு வாழ்க்கை என்னும் புத்தகத்தின் பக்கங்கள் பூர்த்தியடைகின்றது.
முடியாது என்று நீ தீர்மானிக்கும் ஒவ்வொரு செயல்களுக்கும் ஏதாவதொரு வகையில் அதை வெல்ல போகும் யுக்தி புதைந்திருக்கும்…
வெற்றி என்பதை அடைய வேண்டுமா? உன் மீதான விமர்சனங்களையும் தேவையில்லாத விவாதங்களையும் பொருட்படுத்தாதே…! விரைவில் உன் இலக்கை நீ அடைவாய்…
இங்கு இருக்கும் வெற்றியாளர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் எந்தவொரு வகையிலாவது கஷ்டங்களும்,நஷ்டங்கள் மற்றும் பல சிரமங்கள் கண்டிருப்பார்கள். அதை எல்லாம் கடந்த பின்பே வெற்றி என்னும் கோப்பை அவர்களுக்கு கிடைத்திருக்கும்.
இன்றைய உனது செயல்களே நாளை உன்னை உச்சத்திற்கு கொண்டு செல்லும் வெற்றியின் படிக்கட்டுகள்.. உன் திறமையை பொறுத்தே அதன் ஏற்றமும் இறக்கமும் அமையும்…
நடை பழகும் குழந்தை ஒவ்வொரு முறை விழும் போதும் தாங்கி பிடிக்கும் கை தான் நம்பிக்கை கட்டாயம் இதை நாம் வாழும் வாழ்க்கைக்கும் எடுத்துக்கொள்ள வேண்டும்..
ஆங்கில மோகம்
போராட்ட களம்
என் கிறுக்கல்
உன் நினைவுகள்
பாலைவனமாகும் இந்தியா
இந்திய நிலபரப்போடு ஒப்பிடும்போது அதில் சுமார் 1/3 சதவிகித நிலத்தை மட்டுமே கொண்ட பாலைவன நாடுதான் சவுதி அரேபியா…
இந்த பூமியில் நதிகளே இல்லாத நாடாக கூறப்படும் மத்திய கிழக்கில் அமைந்துள்ள சவுதி அரேபியாவில் இதுவரை தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட வரலாறே இல்லை,
பொதுவாக இதுபோன்ற வளைகுடா நாடுகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் வெப்பம் சர்வசாதாரணமாக 50°C இருக்கும்… சவுதி உள்ளிட்ட பல நாடுகளில் மழையின் அளவும் மிக குறைவான அளவிலேயே இருக்கும். ஈராக், சிரியாவில் ஓடும் டைகரீஸ் .நதி மட்டுமே வளைகுடாவின் வடக்கே ஓடும் பெரிய நதியாகும்…
சவுதியில் நிலத்தடி நீர் என்பது கானல் நீர் போலதான் கிடைப்பது அறிதிலும் அறிது, எங்கு தோண்டினாலும் கச்சா எண்ணெய் மட்டுமே கிடைக்கும். அங்கு வசிக்கும் மக்களின் குடிநீர் மற்றும் அத்தியாவிசய தேவைக்கான தண்ணீரை அந்நாட்டு அரசே கடல் நீரையே சுத்தம் செய்து சேகரித்து வைத்து மக்கள் தேவைக்காக விநியோகித்து வருகிறது… இதற்க்காக உலகிலேயே மிக அளவில் பெரிய தண்ணீர் சேகரிக்கும் பல தொட்டிகளை கட்டி அதில் தண்ணீரை சேகரித்து வைத்துள்ளது சவுதி அரேபியா…
வளைகுடா நாடுகளில் பெரும்பாலும் மன்னர் ஆட்சிதான் நடைபெறுகிறது, ஆனால், மக்கள் திருப்தியாக வாழ்கிறார்கள். செல்வத்தில் கொழிக்கிறார்கள்… அந்நாட்டு மக்களின் தேவை உடனடியாகப் பூர்த்தி செய்யப்படுகிறது. ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டு மக்கள் பணத்தை சுரண்டும் நிலை கிடையாது…,