அன்பானவளின் அன்பு கவிதை
RJ Malar
அன்பானவர்களுக்காக இறங்கிபோவதும்
தவறில்லை...
நம் அன்பு புறியாதவர்களிடமிருந்து
விலகி போவதும் தவறில்லை...
ஒரு ஆணின் உண்மையான அன்பை
ஒரு பெண் உணர்ந்து விட்டால்...
அவள்...அவனிடம் ..
எதையும் மறைப்பதும் இல்லை...
மறுப்பதும் இல்லை...
ஒருவரின் அன்பை நீ அலட்சியப்படுத்தும் போது
உனக்கு தெரியாது..
அதே அன்பிற்காக
ஏங்கும் போதுதான் தெரியும்
யார் இதயத்தில் நாம் இருக்கிறோம்
என்பதைவிட
யார் இதயத்தையும் நாம் காயப்படுத்தாமல்
இருக்கிறோம் என்பதே சிறப்பு
மீண்டும் மீண்டும் நினைக்க தோன்றும்
கடந்த காலத்தின் சில நினைவுகள்தான்
நம் வாழ்வின் வசந்த காலம்
அன்பும் ஒருவித போதைதான்
ஒருமுறை ருசித்துவிட்டால்
அடிமையாகிவிடுகிறது மனது
பிடிதவர்களுடன் சண்டை போடுவது
அவர்களை பிரியவேண்டும்
என்பதற்காக அல்ல - எப்போதும்
பிரிந்திட கூடாது என்பதற்காக