Pages

Showing posts with label RJ Malathi. Show all posts
Showing posts with label RJ Malathi. Show all posts

Self Confidence | தன்னம்பிக்கை வரிகள் | RJ Malar Trending

 

Self Confidence | தன்னம்பிக்கை வரிகள்

உனக்குள் இருக்கும் திடகாத்தமான ஆற்றலை வெளிக்கொணர வேண்டி வாழ்க்கை சோதிக்கும் இந்த பரீட்சையில் வெல்வதும் வீழ்வதும் என்றுமே உன் கையிலே…



நம்பிக்கை இருக்கும் மனதில் அச்சம் எழாது..! தன்னம்பிக்கை கொண்டவனின் கைகள் உழைக்க தயங்காது…!


ஒருவர் உன்னை மதிப்பதால் நீ பெரியதாகிவிடப்போவது இல்லை..! உன்னை இகழ்வதாலும் நீ சிரியதாகிவிடமாட்டாய்..! எனவே என்றுமே நீ நீயே என்பதை வாழ்க்கையில் புரிந்து கொள்…!


எதிலுமே சரிசமமாக இருக்க பழகிக்கொள்… அளவுக்கு மீறின கோபமும் நல்லது அல்ல அளவில்லாத பொறுமையும் உன்னை கொல்லும் மெல்ல… எதுவும் ஒரு அளவுக்கே…!


உடம்பு சரி செய்ய உதவும் ஊசி கூட குத்தினால் வலிக்கும் என்கிறபோது உன் வாழ்க்கையை சரி செய்ய நீ கஷ்டப்பட்டு உழைத்தே ஆக வேண்டும்…


நல்லதோ? கெட்டதோ? அனுபவங்களை நீ பெற்றால் மட்டுமே இங்கு வாழ்க்கை என்னும் புத்தகத்தின் பக்கங்கள் பூர்த்தியடைகின்றது.


முடியாது என்று நீ தீர்மானிக்கும் ஒவ்வொரு செயல்களுக்கும் ஏதாவதொரு வகையில் அதை வெல்ல போகும் யுக்தி புதைந்திருக்கும்…


வெற்றி என்பதை அடைய வேண்டுமா? உன் மீதான விமர்சனங்களையும் தேவையில்லாத விவாதங்களையும் பொருட்படுத்தாதே…! விரைவில் உன் இலக்கை நீ அடைவாய்…


இங்கு இருக்கும் வெற்றியாளர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் எந்தவொரு வகையிலாவது கஷ்டங்களும்,நஷ்டங்கள் மற்றும் பல சிரமங்கள் கண்டிருப்பார்கள். அதை எல்லாம் கடந்த பின்பே வெற்றி என்னும் கோப்பை அவர்களுக்கு கிடைத்திருக்கும்.


இன்றைய உனது செயல்களே நாளை உன்னை உச்சத்திற்கு கொண்டு செல்லும் வெற்றியின் படிக்கட்டுகள்.. உன் திறமையை பொறுத்தே அதன் ஏற்றமும் இறக்கமும் அமையும்…


நடை பழகும் குழந்தை ஒவ்வொரு முறை விழும் போதும் தாங்கி பிடிக்கும் கை தான் நம்பிக்கை கட்டாயம் இதை நாம் வாழும் வாழ்க்கைக்கும் எடுத்துக்கொள்ள வேண்டும்..