காதல் கவிதை | Trending
RJ Malar
கற்காலம் முதல்
இந்த கணினி காலம் வரை
இந்த காதல் சொல்லப்படும்
விதம் மாறுபட்டதே தவிர
காதலுக்காக எழுதப்படும்
கவிதைகள் தொடர்ந்து
கொண்டுதான் இருக்கிறது.
அப்படி தன் காதலி மேல்
கொண்ட பிரியத்தால்
அந்த பிரியன்
எழுதிய வரிகள் இதோ....
நின்
அருகாமையில் வேகமாகவும்
தூரத்தில் மெதுவாகவும்
சுழல்வதுமாய் உலகம்;
உன்னால்
பைத்தியமாகிவிட்டது அதுவும்!
*
உன்னில் பாதியாய்
என்னில் மீதியாய்
நம்மில்
முழுதும் காதல்!
*
காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!
*
வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும்
கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!
*
உன்
கண்மையைக் கொடு;
மைப்போட்டு பார்க்கலாம்
உன்னில் தொலைந்த
என்னிதயத்தை!
No comments:
Post a Comment