அவளின் நினைவுகள்
என் மனம் என்னும் சிப்பிக்குள்
முத்துபோல் சேமித்து வைத்தேன்
அவளின் நினைவுகளை
அவளின் நினைவுகளை
For more videos Subscribe My channel
https://bit.ly/3iJ8QRxஎன் வாழ்க்கை பிரகாசமாய்
ஒளிரும் என்று நம்பியிருந்தேன்
ஆனால் - இன்றோ
நான் சேர்த்து வைத்த நினைவுகள் எல்லாம்
என்னை சேதப்படுத்துகிறது
பேருந்தின் ஜன்னலோர பயணத்தில்
கார்மேகம் பொழியும் மழையை கூட ரசிக்க முடியவில்லை
மேகம் கடந்து மழை துளி நின்ற போதிலும்
காலம் கடந்த உன் நினைவுகள்
கண்ணீர் துளியாய் சிந்துகிறது
உன்னோடு பயணம் செய்த
நாட்களை நினைக்கும் போது
உன் நினைவுகளின் வலியால்
நான் துடிக்கிறேன்
மரிக்கிறேன்...