Pages

RJ மலரின் வாழ்க்கை

வாழ்க்கை

என் மனதின் காயங்களுக்கு

யார் காரணம் என கேட்டால்

என்னுடைய எதிர்பார்ப்புகள்

என்பதே உண்மை



சரியான நேரத்தில் அனைத்தும் 

உன்னை வந்து சேரும்

கவலை கொள்ளாதே


தேவையில்லாமல் பேசுவதைவிட

அமைதியாகவே இருந்துவிடலாம்


நம் மனது புரியாத யாருக்கும்

நம் வார்த்தைகளும்

புரியாது


மணம் முடிக்கும் வரை

நேசிப்பது காதலில்லை

மரணம் வரை நேசிப்பதுதான்

உண்மை காதல்


நிறுத்தவும் முடியாமல்

தொடரவும் முடியாமல் 

சில தேடல்கள்


நெருங்கவும் முடியாமல்

விலகவும் முடியாமல்

சில உறவுகள்


சொல்லவும் முடியாமல்

கொல்லவும் முடியாமல்

சில ஆசைகள்


மறுக்கவும் முடியாமல்

வெறுக்கவும் முடியாமல்

சில நினைவுகள்


மாளிகையோ குடிசையோ

எங்கே வாழ்கிறோம்

என்பதல்ல வாழ்க்கை

நாம்

எங்கே சந்தோசமாக வாழ்கிறோம்

என்பதுதான் வாழ்க்கை...

காதல் கவிதை | RJ Malar | Trending

காதல் கவிதை  | Trending

RJ Malar

கற்காலம் முதல்
இந்த கணினி காலம் வரை 
இந்த காதல் சொல்லப்படும் 
விதம் மாறுபட்டதே தவிர 
காதலுக்காக எழுதப்படும் 
கவிதைகள் தொடர்ந்து 
கொண்டுதான் இருக்கிறது.
அப்படி தன் காதலி மேல்
கொண்ட பிரியத்தால்
அந்த பிரியன் 
எழுதிய வரிகள் இதோ....





நின்
அருகாமையில் வேகமாகவும்
தூரத்தில் மெதுவாகவும்
சுழல்வதுமாய் உலகம்;
உன்னால்
பைத்தியமாகிவிட்டது அதுவும்!

*

உன்னில் பாதியாய்
என்னில் மீதியாய்
நம்மில்
முழுதும் காதல்!

*

காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

*

வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் 
கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!

*

உன்
கண்மையைக் கொடு;
மைப்போட்டு பார்க்கலாம்
உன்னில் தொலைந்த
என்னிதயத்தை!

அவளின் நினைவுகள் I Ishu I Trending Memories

அவளின் நினைவுகள் 

என் மனம் என்னும் சிப்பிக்குள் 

முத்துபோல் சேமித்து வைத்தேன்

அவளின் நினைவுகளை  

அவளின் நினைவுகளை

For more videos Subscribe My channel

https://bit.ly/3iJ8QRx

என் வாழ்க்கை பிரகாசமாய் 

ஒளிரும் என்று நம்பியிருந்தேன் 

ஆனால் - இன்றோ 

நான் சேர்த்து வைத்த நினைவுகள் எல்லாம் 

என்னை சேதப்படுத்துகிறது 


பேருந்தின்  ஜன்னலோர பயணத்தில் 

கார்மேகம் பொழியும் மழையை கூட ரசிக்க முடியவில்லை 


மேகம் கடந்து மழை துளி நின்ற போதிலும் 

காலம் கடந்த உன் நினைவுகள் 

கண்ணீர் துளியாய் சிந்துகிறது

உன்னோடு பயணம் செய்த 

நாட்களை நினைக்கும் போது 


உன் நினைவுகளின் வலியால் 

நான் துடிக்கிறேன் 

மரிக்கிறேன்...


முயற்சி | Hard work | RJ Suba.J

 முயற்சி | Hard work 

முயற்சி என்பது விதை
போல அதை விதைத்துக்
கொண்டே இரு முளைத்தால்
மரம் இல்லையேல்
நிலத்திற்கு உரம்.


Self Confidence | தன்னம்பிக்கை வரிகள் | RJ Malar Trending

 

Self Confidence | தன்னம்பிக்கை வரிகள்

உனக்குள் இருக்கும் திடகாத்தமான ஆற்றலை வெளிக்கொணர வேண்டி வாழ்க்கை சோதிக்கும் இந்த பரீட்சையில் வெல்வதும் வீழ்வதும் என்றுமே உன் கையிலே…



நம்பிக்கை இருக்கும் மனதில் அச்சம் எழாது..! தன்னம்பிக்கை கொண்டவனின் கைகள் உழைக்க தயங்காது…!


ஒருவர் உன்னை மதிப்பதால் நீ பெரியதாகிவிடப்போவது இல்லை..! உன்னை இகழ்வதாலும் நீ சிரியதாகிவிடமாட்டாய்..! எனவே என்றுமே நீ நீயே என்பதை வாழ்க்கையில் புரிந்து கொள்…!


எதிலுமே சரிசமமாக இருக்க பழகிக்கொள்… அளவுக்கு மீறின கோபமும் நல்லது அல்ல அளவில்லாத பொறுமையும் உன்னை கொல்லும் மெல்ல… எதுவும் ஒரு அளவுக்கே…!


உடம்பு சரி செய்ய உதவும் ஊசி கூட குத்தினால் வலிக்கும் என்கிறபோது உன் வாழ்க்கையை சரி செய்ய நீ கஷ்டப்பட்டு உழைத்தே ஆக வேண்டும்…


நல்லதோ? கெட்டதோ? அனுபவங்களை நீ பெற்றால் மட்டுமே இங்கு வாழ்க்கை என்னும் புத்தகத்தின் பக்கங்கள் பூர்த்தியடைகின்றது.


முடியாது என்று நீ தீர்மானிக்கும் ஒவ்வொரு செயல்களுக்கும் ஏதாவதொரு வகையில் அதை வெல்ல போகும் யுக்தி புதைந்திருக்கும்…


வெற்றி என்பதை அடைய வேண்டுமா? உன் மீதான விமர்சனங்களையும் தேவையில்லாத விவாதங்களையும் பொருட்படுத்தாதே…! விரைவில் உன் இலக்கை நீ அடைவாய்…


இங்கு இருக்கும் வெற்றியாளர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் எந்தவொரு வகையிலாவது கஷ்டங்களும்,நஷ்டங்கள் மற்றும் பல சிரமங்கள் கண்டிருப்பார்கள். அதை எல்லாம் கடந்த பின்பே வெற்றி என்னும் கோப்பை அவர்களுக்கு கிடைத்திருக்கும்.


இன்றைய உனது செயல்களே நாளை உன்னை உச்சத்திற்கு கொண்டு செல்லும் வெற்றியின் படிக்கட்டுகள்.. உன் திறமையை பொறுத்தே அதன் ஏற்றமும் இறக்கமும் அமையும்…


நடை பழகும் குழந்தை ஒவ்வொரு முறை விழும் போதும் தாங்கி பிடிக்கும் கை தான் நம்பிக்கை கட்டாயம் இதை நாம் வாழும் வாழ்க்கைக்கும் எடுத்துக்கொள்ள வேண்டும்..

ஆங்கில மோகம்

sureSH Kavithai
@sure4an
தன்னைவிட வயதில் மூத்த பெண்களை
தமிழில் அம்மா, அக்கா என விளிக்கும் போது
பெண்களுக்கு இருந்த பாதுகாப்பு
ஆங்கில மோகத்தில் ஆன்டி என அழைக்கத் துவங்கியபின் இல்லை.
@sure4an

போராட்ட களம்

sureSH Kavithai
@sure4an
இலவசங்களும் ஏமாற்றங்களுமே 
நம்மை எப்போதும் ஆளுகின்றன...
போராட்ட களத்தில் நெருப்பும் 
தோட்டாக்களுமே நம்மை அடக்குகின்றன...
@sure4an

என் வாழ்க்கை

sureSH Kavithai

என் வாழ்க்கையை அழகாக்கும் விடயங்களில்
உன்னோடு பகிரியில் உரையாடும் தருணமும் ஒன்று...

என் கிறுக்கல்

sureSH Kavithai
@sure4an

என் கிறுக்கல்களை ஆராய்ந்தால் போதும்
கிறுக்கல்களுக்கு காரணமானவள்
யாரென ஆராய வேண்டாம்...
@sure4an

உன் நினைவுகள்

Tamil Kavithai
@sure4an

உன்னோடு அரட்டை அடிக்கும் இரவெல்லாம்
விடியாமல் போகட்டும்...
நீயில்லா நேரமெல்லாம்
உன் நினைவுகளோடே கடக்கட்டும்...
@sure4an