Pages

RJ மலரின் வாழ்க்கை

வாழ்க்கை

என் மனதின் காயங்களுக்கு

யார் காரணம் என கேட்டால்

என்னுடைய எதிர்பார்ப்புகள்

என்பதே உண்மை



சரியான நேரத்தில் அனைத்தும் 

உன்னை வந்து சேரும்

கவலை கொள்ளாதே


தேவையில்லாமல் பேசுவதைவிட

அமைதியாகவே இருந்துவிடலாம்


நம் மனது புரியாத யாருக்கும்

நம் வார்த்தைகளும்

புரியாது


மணம் முடிக்கும் வரை

நேசிப்பது காதலில்லை

மரணம் வரை நேசிப்பதுதான்

உண்மை காதல்


நிறுத்தவும் முடியாமல்

தொடரவும் முடியாமல் 

சில தேடல்கள்


நெருங்கவும் முடியாமல்

விலகவும் முடியாமல்

சில உறவுகள்


சொல்லவும் முடியாமல்

கொல்லவும் முடியாமல்

சில ஆசைகள்


மறுக்கவும் முடியாமல்

வெறுக்கவும் முடியாமல்

சில நினைவுகள்


மாளிகையோ குடிசையோ

எங்கே வாழ்கிறோம்

என்பதல்ல வாழ்க்கை

நாம்

எங்கே சந்தோசமாக வாழ்கிறோம்

என்பதுதான் வாழ்க்கை...

No comments:

Post a Comment