Pages

கவிதை

போதையில் விழுந்து கிடக்கிறான் என்று
வீதியில் செல்பவர்கள் கூறுகின்றனர்
பாவம் அவர்களுக்கு எப்படி தெரியும்
என் வீடே அதுதான் என்று!!!

அவள் பற்றியே அனைத்தும்

குங்குமம் எடுத்து
நெற்றியில் ஒற்றிக்கொண்டாய்!

உதிர்ந்த குங்குமமெல்லாம் ஓன்று சேர்ந்து
உன் மூக்கின் மேல் விழுந்து
ஆறுதல் கொண்டது!!

கரும்பலகை(BLACK BOARD)

கருப்பு என்றால் பலருக்கு வெறுப்பு
ஆனால் பலரின் எதிர்காலம்
என்னால் தான் என்றபோது
நான் அடைகிறேன் வியப்பு!!!

நினைவு பொக்கிசங்கள்......!!!!!!

பூக்கள் பறித்து அதில்
உன் வாசம் தேடிய நாட்களும்..

பூமியில் நடந்தால் கூட
ஏதோ வானத்தில் பறப்பதை
போல் உணந்த நாட்களும்....

உன் வீட்டு வாசலில் நீ
புள்ளி வைத்து என் மனதில்
கோலம் போட்ட நாட்களும்...

விழியால் பேசும் ஒரு வித
வித்தியாச உணர்வை
உணந்த நாட்களும்.....

மனதுக்குள் தோன்றிய
எண்ணங்களை எல்லாம்
மௌன பூட்டால் அடைத்து விட்டு
மனதுக்குள் அழுத நாட்களும்...

ஒரு சிறு பயணத்தை கூட...
நீண்ட பயணமாக மாற்றிய நாட்களும்..

உனக்கு மறந்திருக்கலாம்....
ஆனால் எனக்கு மறக்காது..!!! ஏனென்றால்

என்னை நீ பிரிந்து போன பின்பும்
நான் உன்னையே நினைத்திருக்க...!!!
தேவையான நினைவு பொக்கிசங்கள்
அவைகளெல்லாம்......!!!!!!

"பிரிவுகள் எல்லாம் நிரந்தரமல்ல"

கண்கள் மூடி உன் சிந்தனையில் லயித்திருந்தேன்

காற்று வந்து என் காதுக்குள் ஏதோ முணுமுணுக்க

நினைவாய் என்னுள் மறைந்த நீ நிஜமாய் எதிரில்

கால்கள் பின்னிக்கொள்ள தள்ளாடித் தவித்தேன்

நெருங்கி கைபிடித்து நெஞ்சோடு சேர்த்தணைதாய்

கன்னம் தொட்டு என்னை உன் புறம் திருப்பினாய்

முத்தமிட்டு கண்ணீர் முத்துக்களை உலரவைத்தாய்

நான் மயங்கிய நேரம் மடிகொடுத்து தாலாட்டினாய்

கலங்கிய போது கட்டியணைத்து ஆறுதல் சொன்னாய்

முன்நாள் பிரிவின் துயரம் அந்நாள் என்னில் இல்லை

கையசைத்து விடை கொடுத்தாய்

மீண்டும்........................... கண்கள் மூடினேன்

காற்று வந்து காதுக்குள் பேசியது


"பிரிவுகள் எல்லாம் நிரந்தரமல்ல"

உன் அன்பின் நினைவில்...!!!!!

நீ விரும்பாததை நான்
வெறுத்த போதும்...!!!

நான் விரும்புவதை நீ
நேசித்த போதும்...
உருவானது ஒரு இனிய உறவு...

என் தவறை நீ சுட்டி காட்டிய போதும்..
உன் கோபத்தின் பின் விளைவை
நான் விளக்கி சொன்ன போதும்....

முழு மனதோடு நாம் ஏற்று கொண்ட
பரஸ்பரத்திலேயே நீடிக்கிறது நம் உறவு...

நான் உன்னை மறக்க மாட்டேன்.....நீயும்
என்னை மறக்க கூடாது...என்று நீ சொன்ன
அன்பு கட்டளைக்கு அடி பணிந்து.....
ஆயுள் எல்லாம் காத்திருக்கிறேன்.....

நீயும் என்னை மறக்காமல்......
இருப்பாயா என்ற கேள்வி குறியோடும்???
உன் அன்பான நினைவோடும்...!!!!!!!!!

" ப்ரிய சகி "

" ப்ரிய சகி "
அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நனயணக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே...
~பட்டர்

வேறு :

இறுகப்பற்றின இருகைகளின் கொள்ளாமையால்
சிந்தவிட்ட நினைவுகள்
கால்வழியூர்ந்து கழுத்தை நிரைக்கிறது
கண்மணி.........

கடலின் நிழல் வீழுங்காயலில்
ஒரு காலை தூக்கித்தவஞ்செய்யுமொரு
சிறு கொக்காய் காத்திருக்கிறேன்...
நடக்கவொண்ணா மென்பாதங்களை
அறிந்தெடுத்து,
திருவுடலை திரு வோடாக்கி
வேண்டி வருந்துகையில்...

இது கேள்..!
நீ யென் யாசகம்.
பவதி பிச்ஷாந்தேஹி....!


ஏற்ற வற்றங்காணு மென்ணிமை பரப்பை
இழுத்துச்சுருக்கும் இரவினுக்கு
பருவச்சிறகை பரிசளிக்கிறேன்...!
ஆடைகளற்ற சுய தரிசனத்தை
பரிமாற்றி பெருயேப்பம் விடுகையில்
இதை சொல்வேன்..

.................................... சகி
நீ யென் சுயவின்பம்..!


சமாதியில்,
இடம் விட்டு படுத்திருக்கும் காலத்திற்கு
நீ முத்தமிட்ட காற்றை அனுப்பினேன்
முத்தங்களை வாங்கி~பின்
வளி வழி வலியனுப்பியது..
இவ்வாறு சகி.,

என்வானில்
தினமிரவில் நிகழுமோர்
சூரிய தற்கொலை..

இன்னதாவது..

நீ யென் கர்மா
ஊழ்'ன் வழியது வாழ்வு..


கானலின் சலனமாய் காண வாய்க்கிறாய்
எமபதியின் கொம்பிலமரும் காக்கையென
எத்தனிக்குங் காலத்திற்கு
பதில் கூற வேண்டியிருக்கிறது..

பத்திரப்படுத்திய மன்மத கணைகளால்
ஊடறுக்கிறேன்..

பிளந்த மாரினுள் நுழைந்து பார்..
உள்ளுருளும் வொன்றிற்கு.,
உன் பேர்...!

நீ யெனது இன்னுயிர்...!

ப்
ரி

ச கி..!!

காதல் பட்ட காரணத்தால்..

பஞ்சு மெத்தையில் நெஞ்சைக் குதறி
ரத்தம் ருசித்த
தாலிச்சரடும்.,
பிரண்ட தலையணையில்
உருண்டுப்படுத்து, என் தோளுடைத்த
கைவளையும்.,
வேர்வை ஊர்ந்து
"விர்" ரெனப் பிடித்த
விரல் நகக் கீறலும்.,
உன்னைச் சுவைக்க
உதட்டைச் சுவைத்து
உரசிக்கொண்ட மேல்வாய்ப் பல்லும்.,
முத்தம் மாற்றி, ரத்தம் மாற்றிய
இதழோரத்தில்
மென்வாய்ப்புன்னும்.,
வலிக்கவில்லையடீ....
காதல் பட்ட காரணத்தால்....

பஞ்சு வரை புகைத்து நெஞ்சை எரித்த..,
சிகரெட் கொப்பளங்கள்..!
உன் பேரெழுதி வெட்டப்பட்ட நரம்புகளால்..,
பிளேடுகளில் ரத்தத்துளி..!
உன் கைபட்டு கிழித்த என் கவிதை..,
ஹலால் செய்யப்பட்ட ஆட்டுத்தலை..!
தண்டவாள பிணங்களின் ரத்தம்.,
காக்கை வாயில் எச்சம்..!
என் கண் உகுத்த கண்ணீர்.,
உன் பாவாடை சேறு..!
சாக்கடை அரித்த சல்லடை தேக்கமாய்
காலம் கரைத்து எஞ்சிய காதல்
அடக்கிவைத்த ஆசைகளெல்லாம்..
கண்ணீராய் கொப்பளிக்க.,
காதல் பட்ட காரணத்தால்
வலிக்காத ரணமெல்லாம்....
வலிக்குதடி...
காயம் பட்ட காரணத்தால்..!

கிராமத்துக் காதலி

பணிக்காக பட்டணம் பயணப்பட்டவன்...
பண்டிகைக்காக மட்டும்
சொந்தக் கிராமம் நோக்கி பயணிக்கிறேன்...

பேருந்தில் ஏறி ஜன்னலோர
இருக்கைத் தேடி அமர்ந்து...
ஜன்னலின் திரைச்சீலை விலக்கினேன்..
தானாகவே விலகிக் கொண்டது
கூடவே எனது மனத்திரையும்.....

 ஏதோ சத்தம் கேட்டு
வெளியில் எட்டிப் பார்த்தேன்...
ஒரு குட்டி தேவதை
மிளிரும் புன்னகையோடும்,
மழலை பேச்சோடும்,
தன் தாயின் விரல் பிடித்து
நடக்கும் காட்சியை கண்டேன்....

அது பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டும்
காட்சிதான் எனினும், வேகமாக முகம் திருப்பி,
இருக்கையில் சாய்ந்தேன்..!!!!!

பேருந்து முன்னோக்கியும்,
நினைவுகள் பின்னோக்கியும்,
ஒருசேரப் பயணப்பட்டது....!!!!

அந்த பிஞ்சு மழலையின் பேச்சு,
உன்னுடனான ஆரம்பக்கல்வி
காலங்களை நினைவு படுத்த
அதில் மூழ்கியபடி கண் அயர்ந்தேன்..

வெளியில் மீண்டும் சத்தம்
என்னவென்று கதவு திறந்தேன்...!!!!
மேகத்தோடு தென்றலும்,
என் இதயத்தோடு உன் நினைவுகளும்,
ஒரு சேர மோதி இரு வேறு துளியாய்
வெளிப்பட்டது வெளியில் மழையாகவும்,
விழியில் கண்ணீராகவும்....

ஒன்று உனக்கு பிடித்த மழை,
மற்றொன்று எனக்கு பிடித்த உன் நினைவுகள்..
எனவே இரண்டையும் ரசித்தபடி,
பயணம் தொடர்ந்தது.....!!!

உயர்க்கல்வியில் உடைந்த நம்நட்பு
கல்லூரியிலும் கை கூடாமல்
போனதை நினைத்து கொண்டும்,

சில வருடம் பார்க்காமலும்,
பல வருடம் பேசாமலும்,
கடந்த போன நாட்களின்
வறட்சி கண்களில் மீண்டும் நீர் வார்க்க,
சுகமான பயணமும் முடிவுக்கு வர...,

கீழிறங்கி பார்வை வீசினேன்....
கண் அளக்கும் தூரத்தில் எப்போதும்போல.....
உன் சாயலில் ஒரு பெண் முகம் தெரிய
நடையை தொடர்கிறேன்....
அது நீயாக இருந்து விட மாட்டாயோ?
என்ற கேள்விக்குறியோடும்? எதிர்பார்ப்போடும்?
உன் மீதான அதே பழையக் காதலுடன்....!!!!!!

சந்தோச கண்ணீரே



"சந்தோச கண்ணீரே"!... "
பொக்கிசங்கள் உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்!.... 
உன்னை தேடித் தேடி தோய்ந்து விட்ட‌ என் நினைவுகள்,.. 
இன்று, சிதறிப்போன கண்ணாடி சில்லுகளாய்!... 
சாலையோரம் உன் வருகைக்காக‌ முகம் புதைத்து காத்திருக்கின்றன!... 
என்னை விட்டு நீங்கி போனது நீ மட்டுமல்ல‌,.. 
உன் நினைவுகளும் தான் என்பது, 
எனக்கு மட்டுமே தேரிந்த உண்மை என் நினைவுகளுக்கல்ல!.... 
பொக்கிசங்கள் உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்"!.... 
உணர்வுகளுடன், "நான்"