Pages

நினைவுகள் I TrenDing Now

நினைவுகள்

@sure4an

 நல்ல நினைவுகளாக

இருந்தாலும் சரி கெட்ட

நினைவுகளாக இருந்தாலும் சரி

நினைவுகள் எப்போதும் நம்மலோடுதான் இருக்கும்..

மறக்க இயலாது.

நினைவுகள் வீடியோ 


ஒவ்வொரு காதல் நினைவும் விசேஷமானதுதான்... 

அதிலும் முதல் முறையாக காதலை உணரும்போதும்,

அந்த உணர்வை காதலியிடம்

அல்லது காதலனிடம் சொல்லும்போது ஏற்பட்ட சந்தோஷம், 

பதட்டம், உணர்ச்சிப் தடுமாற்றம் ... 

எல்லாம் மறக்க முடியாத 

பசுமையான நினைவுகள்.


நாட்கள் கடந்து போனாலும் இன்றும் கனமாகதான்

இருக்கிறது மனது.. 

கலைந்து

போனாலும் கனவாக

இருக்கிறது நினைவு..!


தொலைத்த இடமும்

தெரிகின்றது..

தொலைந்த

பொருளும் தெரிகின்றது..

வலியும் உணரப்படுகிறது..

ஆனால் திருப்பி மீட்கத்தான்

முடியவில்லை.

எல்லாமே நினைவுகளாக.


நிஜங்கள் தரும் சந்தோஷத்தை

விட நினைவுகள் தரும்

சந்தோஷம் அதிகம்..

அதனால் தான் நிஜங்கள்

நிலைப்பதில்லை நினைவுகள்

என்றும் அழிவதில்லை.


முகவரி இன்றி முடிந்து போன

உறவுகளிடம் தான் முடங்கி

விடுகிறது நம் நினைவுகள்.


பிடிப்பதற்கு காரணம் இருந்தும்

பிடிக்காமல் போகிறது சிலரை..

வெறுப்பதற்கு காரணம்

இருந்தும் வெறுக்க

முடியவில்லை சிலரை..!


நிஜம் ஒரு நொடி வலி 

நினைவு

ஒவ்வொரு நொடியும் வலி.

மறக்க இயலாமல் வலியுடன்

நினைவுகளை சுமப்பதில்

உள்ளது உண்மையான அன்பு.


உணர்வுகளை நினைவுகளாய்

சேமிக்கும் மனிதர்கள் நாம்..

உணர்வுகளும் குறைய

போவதில்லை.. நினைவுகளும்

முடிய போவதில்லை..


மிக அழகானது சிலரின்

நினைவுகள்.

இது என்னவலுக்காக


உனது நினைவுகளால் நான்

அழிந்து போனாலும்..

உன் நினைவுகள் என்றும்

என்னை விட்டு அழிவதில்லை..!


தனக்காக அழுத பெண்ணையும்

தன்னை அழ வைத்த

பெண்ணையும் ஆண்கள்

ஒருபோதும் மறப்பதில்லை.


என் வாழ்க்கையில் மறக்க

முடியாத நிமிடங்களை உன்னோடு

வாழ்ந்து விட்டேன் இந்த

நினைவுகள் ஒன்றே போதும்

என் உயிர் நீங்கும் வரை..!


உனக்கு என் நினைவு வந்தால்

 உன் இதயத்தைத் தொட்டுப்பார்

நான் துடிப்பேன்..

உன் நினைவுகளோடு.



இறந்து கொண்டிருக்கும்

ஒவ்வொரு நொடியையும்..

என்றும் உயிர்ப்புடன்

வைத்திருப்பது என்னை

நீங்கா உன் நினைவுகள் மட்டுமே..!

1 comment: