முயற்சி | Hard work | RJ Suba.J
Self Confidence | தன்னம்பிக்கை வரிகள் | RJ Malar Trending
Self Confidence | தன்னம்பிக்கை வரிகள்
உனக்குள் இருக்கும் திடகாத்தமான ஆற்றலை வெளிக்கொணர வேண்டி வாழ்க்கை சோதிக்கும் இந்த பரீட்சையில் வெல்வதும் வீழ்வதும் என்றுமே உன் கையிலே…
நம்பிக்கை இருக்கும் மனதில் அச்சம் எழாது..! தன்னம்பிக்கை கொண்டவனின் கைகள் உழைக்க தயங்காது…!
ஒருவர் உன்னை மதிப்பதால் நீ பெரியதாகிவிடப்போவது இல்லை..! உன்னை இகழ்வதாலும் நீ சிரியதாகிவிடமாட்டாய்..! எனவே என்றுமே நீ நீயே என்பதை வாழ்க்கையில் புரிந்து கொள்…!
எதிலுமே சரிசமமாக இருக்க பழகிக்கொள்… அளவுக்கு மீறின கோபமும் நல்லது அல்ல அளவில்லாத பொறுமையும் உன்னை கொல்லும் மெல்ல… எதுவும் ஒரு அளவுக்கே…!
உடம்பு சரி செய்ய உதவும் ஊசி கூட குத்தினால் வலிக்கும் என்கிறபோது உன் வாழ்க்கையை சரி செய்ய நீ கஷ்டப்பட்டு உழைத்தே ஆக வேண்டும்…
நல்லதோ? கெட்டதோ? அனுபவங்களை நீ பெற்றால் மட்டுமே இங்கு வாழ்க்கை என்னும் புத்தகத்தின் பக்கங்கள் பூர்த்தியடைகின்றது.
முடியாது என்று நீ தீர்மானிக்கும் ஒவ்வொரு செயல்களுக்கும் ஏதாவதொரு வகையில் அதை வெல்ல போகும் யுக்தி புதைந்திருக்கும்…
வெற்றி என்பதை அடைய வேண்டுமா? உன் மீதான விமர்சனங்களையும் தேவையில்லாத விவாதங்களையும் பொருட்படுத்தாதே…! விரைவில் உன் இலக்கை நீ அடைவாய்…
இங்கு இருக்கும் வெற்றியாளர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் எந்தவொரு வகையிலாவது கஷ்டங்களும்,நஷ்டங்கள் மற்றும் பல சிரமங்கள் கண்டிருப்பார்கள். அதை எல்லாம் கடந்த பின்பே வெற்றி என்னும் கோப்பை அவர்களுக்கு கிடைத்திருக்கும்.
இன்றைய உனது செயல்களே நாளை உன்னை உச்சத்திற்கு கொண்டு செல்லும் வெற்றியின் படிக்கட்டுகள்.. உன் திறமையை பொறுத்தே அதன் ஏற்றமும் இறக்கமும் அமையும்…
நடை பழகும் குழந்தை ஒவ்வொரு முறை விழும் போதும் தாங்கி பிடிக்கும் கை தான் நம்பிக்கை கட்டாயம் இதை நாம் வாழும் வாழ்க்கைக்கும் எடுத்துக்கொள்ள வேண்டும்..
ஆங்கில மோகம்
போராட்ட களம்
என் கிறுக்கல்
உன் நினைவுகள்
பாலைவனமாகும் இந்தியா
இந்திய நிலபரப்போடு ஒப்பிடும்போது அதில் சுமார் 1/3 சதவிகித நிலத்தை மட்டுமே கொண்ட பாலைவன நாடுதான் சவுதி அரேபியா…
இந்த பூமியில் நதிகளே இல்லாத நாடாக கூறப்படும் மத்திய கிழக்கில் அமைந்துள்ள சவுதி அரேபியாவில் இதுவரை தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட வரலாறே இல்லை,
பொதுவாக இதுபோன்ற வளைகுடா நாடுகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் வெப்பம் சர்வசாதாரணமாக 50°C இருக்கும்… சவுதி உள்ளிட்ட பல நாடுகளில் மழையின் அளவும் மிக குறைவான அளவிலேயே இருக்கும். ஈராக், சிரியாவில் ஓடும் டைகரீஸ் .நதி மட்டுமே வளைகுடாவின் வடக்கே ஓடும் பெரிய நதியாகும்…
சவுதியில் நிலத்தடி நீர் என்பது கானல் நீர் போலதான் கிடைப்பது அறிதிலும் அறிது, எங்கு தோண்டினாலும் கச்சா எண்ணெய் மட்டுமே கிடைக்கும். அங்கு வசிக்கும் மக்களின் குடிநீர் மற்றும் அத்தியாவிசய தேவைக்கான தண்ணீரை அந்நாட்டு அரசே கடல் நீரையே சுத்தம் செய்து சேகரித்து வைத்து மக்கள் தேவைக்காக விநியோகித்து வருகிறது… இதற்க்காக உலகிலேயே மிக அளவில் பெரிய தண்ணீர் சேகரிக்கும் பல தொட்டிகளை கட்டி அதில் தண்ணீரை சேகரித்து வைத்துள்ளது சவுதி அரேபியா…
வளைகுடா நாடுகளில் பெரும்பாலும் மன்னர் ஆட்சிதான் நடைபெறுகிறது, ஆனால், மக்கள் திருப்தியாக வாழ்கிறார்கள். செல்வத்தில் கொழிக்கிறார்கள்… அந்நாட்டு மக்களின் தேவை உடனடியாகப் பூர்த்தி செய்யப்படுகிறது. ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டு மக்கள் பணத்தை சுரண்டும் நிலை கிடையாது…,
வாழ்க்கை வாழ்வதற்கே
நான் அருந்தும் தேநீர் மணமா சுவையாக இருந்தால் மட்டும் போதாது...
குடிக்கும் கோப்பை வெள்ளியாக இருக்க வேண்டும் என்றாள் எப்படி?
நாம் வாழும் இந்த வாழ்க்கை வாழ்வதற்கே...
உனக்கு கிடைத்ததே சிறந்ததென எண்ணி
மன அழுத்தம் போக்கி, மன நிறைவோட வாழ பழகிக்கொள்...
மறைந்திருக்கும் நீர் அரசியல்
'இந்த உலகில் பலபேர் காதலிக்காமல் வாழ்ந்து இறந்திருக்கலாம்... ஆனால் நீர் இல்லாமல் மனிதர்கள் மட்டுமல்ல எந்த உயிரினமும் வாழ்ந்து விட முடியாது'
பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், நம்மில் எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?
மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம் (economy). மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.
ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் தண்ணீர் - 5 லிட்டர் தண்ணீர்
ஒரு கிளாஸ் பீர் - 74 லிட்டர் தண்ணீர்
ஒரு பர்கர் - 2500 லிட்டர் தண்ணீர்
ஒரு கிளாஸ் பால் - 208 லிட்டர் தண்ணீர்
ஒரு கிளாஸ் ஒயின் - 118 லிட்டர் தண்ணீர்
ஒரு ஜோடி காலணி - 7770 லிட்டர் தண்ணீர்
ஒரு டி ஷர்ட் - 1960 லிட்டர் தண்ணீர்
ஒரு ஜீன்ஸ் - 6660 லிட்டர் தண்ணீர்
ஒரு பார் சாக்லேட் - 2500 லிட்டர் தண்ணீர்
1.1 டன் எடையுள்ள கார் - 4 லட்சம் லிட்டர் தண்ணீர்
புத்திசாலி நாடுகள்! நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன.
இது இந்திய நிலவரம்!
முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.
மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்.
வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.
சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும். ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.
பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.
தண்ணீரை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம்!
ஏன் உலக நாடுகள் இங்கிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். அங்கு இல்லாத தொழில் நுட்பமா, அங்கு இல்லாத வளங்களா, அங்கு இல்லாத எந்திரங்களா? பிறகு ஏன் உலக நாடுகள் இந்தியாவில் கடை போடுகின்றன. காரணம் தங்கள் வளங்களின் மீது அவர்களுக்குள்ள அக்கறை. அவற்றை பாதுகாக்க ஆரம்பித்து விட்டார்கள். மனித வளச் சுரண்டலையும், இயற்கை வளச் சுரண்டலையும் செய்ய அவர்கள் இந்தியாவைத் தேர்ந்தெடுத்துவிட்டனர். நாம்தான் வளங்களை வாரிக் கொடுப்பதில் வள்ளல்கள் ஆயிற்றே.
நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களால் இந்தியாவிற்கு கணிசமான பொருளாதார வளர்ச்சி இருந்தாலும் கூட, நாம் பொருட்களை ஏற்றுமதி செய்யவில்லை. மாறாக பொருட்களின் வழியே பல கோடி லிட்டர் தண்ணீரையே ஏற்றுமதி செய்கிறோம்.
நம் கண்ணுக்குத் தெரியாமலேயே நாமே நம் நீர் ஆதாரங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
தண்ணீருக்கு எங்கு கணக்கு?
ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.
இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.
மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.