Pages

நெஞ்சே வழி விடு



பாதையோரம் உந்தன்
காதல் போக.....
அந்தப் பாதையோரம்
எந்தன் கால்கள் போகும்.
நெஞ்சே... வழி விடு.
நான்தான்... விடை கொடு.!

மெளனம் என்னைக் கொல்லுதே...
என்மனமே உன்னை நாடுதே.
இரவில் காணும் கனவிலே...
அடிமையாகிறேன் உன் பேச்சிலே.!

கண்கள் திறந்தால் உன் நினைவுகள்...
நிழலாய்த் தோன்றி மறையுதே.
தினமும் காலை தவிக்கிறேன்...
வரமாய் உன்னை அடையவே.!

கண்கள் பார்க்குது கண்ணாடி _ அதில்
தெரியுது உன்விம்பம் முன்னாடி.
புன்னகை தவழும் பூவே _ உன்னைப்
புரிஞ்சுக்க முடியல என் மனசே.!

என் இதயத்தைத் தேடி வந்தவளே...
ஏன் இன்னும் தயக்கம் புரியவில்லே.
தவம் இருந்தேன் உன்னையடைய...
தரிசனமாய் வந்தாய் என்னருகே.!

நம்மிடம் இருப்பதெல்லாம்

நான் உன்னிடம்
ஓன்றே ஒன்றுதான்
கேட்டேன் ..........
அது உன் நட்பு
மட்டும்தான் ............
நீ உன் நட்பை தர யோசித்தால் .........
நான் என் உயிரை விட யோசிகமடேன் .....
ஆனால் என் உயிரை விட்டு
உன்னை யோசிக்க வைப்பேன் ..........
இவன் நட்பு கிடைக்கவில்லை என்று............. ..

-----------------------x-sure-x------------------------

நீயும்
என்னருகில் இல்லை..
நானும்
உன்னருகில் இல்லை...

நீயும்
என்னை பார்த்ததில்லை..
நானும்
உன்னை பார்த்ததில்லை...

நீயும்
என்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை..
நானும்
உன்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை...

நீயும்
என் சந்தோஷங்களை கண்டதில்லை..
நானும்
உன் சந்தோஷங்களை கொண்டாடியதில்லை...

நீயும்
என் வருத்தங்களில்
என் கைகளை பிடித்து கொண்டதில்லை..
நானும்
உன் வருத்தங்களில்
உன் கைகளை பிடித்து கொண்டதில்லை...

நீயும்
எந்த மழை நாளிலும்
என்னோடு நடந்ததில்லை..
நானும்
எந்த மழை நாளிலும்
உன்னோடு நடந்ததில்லை...

நம்மிடம்
இருப்பதெல்லாம்
நாம்
என்று நம்மை சொல்லவைக்கும்
ஒரு சின்ன நட்பு மட்டுமே....

நட்பைவிட வேறேது இன்பம்


நீ எனக்கு தோழியாக கிடைக்க
நான் ஏது தவம் செய்தேனோ?
கலகலவென நகைக்கும் வயதில்
சலனமில்லாமல் இவ்வளவு சோகமா?

உனக்குள் இருக்கும் சோகத்தை
எனக்குள் இன்றே புதைத்துவிட்டு
கள்ளமின்றிச் சிரித்திட
உல்லாச வானில் பறந்திடு

உன் இலட்சியங்களை நிறைவேற்ற
என்றும் உனக்கு துணையாவேன்
இன்றே விரைந்து புறப்படு
நன்றே நடக்கும் உன்வாழ்வில்

பழையனவற்றை மறந்திடு
புதியதை தேடி விரைந்திடு
சோகத்தை தூக்கி எறிந்திடு
தோழி என் தோளில் தலை சாய்த்திடு

ஆயிரம் உறவுகள் தோன்றியும்
அன்பில்லையே என சலிக்காதே
நட்பைவிட வேறேது இன்பம்
நானிருப்பேன் கலங்காதே ....

சின்ன நட்பு மட்டுமே


நீயும்
என்னருகில் இல்லை..
நானும்
உன்னருகில் இல்லை...

நீயும்
என்னை பார்த்ததில்லை..
நானும்
உன்னை பார்த்ததில்லை...

நீயும்
என்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை..
நானும்
உன்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை...

நீயும்
என் சந்தோஷங்களை கண்டதில்லை..
நானும்
உன் சந்தோஷங்களை கொண்டாடியதில்லை...

நீயும்
என் வருத்தங்களில்
என் கைகளை பிடித்து கொண்டதில்லை..
நானும்
உன் வருத்தங்களில்
உன் கைகளை பிடித்து கொண்டதில்லை...

நீயும்
எந்த மழை நாளிலும்
என்னோடு நடந்ததில்லை..
நானும்
எந்த மழை நாளிலும்
உன்னோடு நடந்ததில்லை...

நம்மிடம்
இருப்பதெல்லாம்
நாம்
என்று நம்மை சொல்லவைக்கும்
ஒரு சின்ன நட்பு மட்டுமே....

அது
நான் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
உன்னையும்,
நீ சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
என்னையும்
நினைத்துக்கொள்ள செய்கிறது.!!!!!!!!
தோழியே....

பேசத் துடிக்கும் வார்த்தைகள்

பெண்ணே...!
உன்னைப் பார்க்கும் போது
பேசத் துடிக்கும் வார்த்தைகள்
மெளனமாகி விடுகின்றது.

பெண்ணே....!
உன்னை விட்டு விலகும் போது
உணர்ச்சியற்ற கால்களாய்ப்
போகின்றது.

பெண்ணே....
உன்னை நினைக்கும் போது
கவிமழையாய்ப் பொழிகிறது
என் இதயத்தில்.

பெண்ணே....
உன்னை கனவில் அணைக்கும் போது கூட‌
பூக்களாய் நினைத்து பூஜை அறையில்
பூட்டி வைக்க விரும்புகின்றேன்.

பெண்ணே....
உனைப் பார்த்து வரைந்த போது
என் உயிர் கொடுத்து
உயிர் ஓவியமாய் மாற்றிவிட்டேன்.

பெண்ணே....
உன்னை நினைத்து மரணித்த போது
என்னை ஆழமாய் விரும்பினாய்.
நான் ஆவியாய் அலைகின்றேன்.

பெண்ணே....
மறு ஜென்மம் மலரும் போது
நான் நீயாகவும்... நீ... நானாகவும்
அப்போ புரியும் என் காதல் வலி.

உறவின் வரம்

natpu, Kavithai, tamil
முடிவில்லா வானில் நீ பறக்க
முகவரியாய் தென்பட்ட நட்பு,
முதல் இடம் நீ பிடிக்க
முதல் எழுத்தில் இடமின்றி
உன் வெற்றிக்கு வேர்ராகிடும் நட்பு

உடன் பிறந்தும் உடல் சுமக்கும் எண்ணங்கள் வேறு
எங்கோ பிறந்தாலும் உன் உணர்வுகளை
கட்டி அணைக்கும் பாரு,
உறவொன்று புதைய... உடன் உன்
எண்ணம் தேடுமோ இறப்பு,
நிழல்துடிக்கும்போது இருளுக்குள் ஒளிதேடி
போராடும் அது நட்பு

எதிர்பார்போடு உருவாக்கபடுவதே இப்பிறப்பு
எதிர்பார்ப்பின்றி உறவுக்குள் உரமாகும் நட்பு,
கடவுளுக்கும் உறவுகள் பல உண்டு -இருந்தும்
அவன்கூட ஏங்குகிறான் எமக்கில்லையே என்று

உயிருக்குள் ஓர் உயிர் வளர்த்தாலும் வெளியானால்
மாற்றங்கள் வருவது உண்டு,
ஜென்மத்தின் புனிதமாய் கல்லறைவரை வரும்
வரம்வேறேது ?
ஒவ்வொரு உறவுக்குள்ளும் விதைத்தால் போதும் நட்பு
மௌனமின்றி மனங்கள் பேசும் உறவை வாழவிடும் நட்பு

இதுவே நிஜம்




நீ மட்டும்
என்னருகில்
இருந்தால்
நான் விழிகள்
மூடாமல்
உன்னையே
பார்த்துக்
கொண்டிருப்பேன்.


உன் பார்வை
என்மீது பட்டால்
நான் சுவாசிக்காமலே
உயிர் வாழ்ந்து
கொண்டிருப்பேன்


என்னைப் பெயர்
சொல்லி நீ
அழைத்தால்
குயிலே கவிதை
சொன்னாலும்
நான் அதை
வெறுப்பேன்.

நான் தூங்கும்
போதுகூட
கனவிலே நீ
தோன்ற மறுத்தால்
மறுகணமே இறப்பேன்!