Pages

பாலைவனமாகும் இந்தியா


இந்திய நிலபரப்போடு ஒப்பிடும்போது அதில் சுமார் 1/3 சதவிகித நிலத்தை மட்டுமே கொண்ட பாலைவன நாடுதான் சவுதி அரேபியா…

இந்த பூமியில் நதிகளே இல்லாத நாடாக கூறப்படும் மத்திய கிழக்கில் அமைந்துள்ள சவுதி அரேபியாவில் இதுவரை தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட வரலாறே இல்லை,

பொதுவாக இதுபோன்ற வளைகுடா நாடுகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் வெப்பம் சர்வசாதாரணமாக 50°C இருக்கும்… சவுதி உள்ளிட்ட பல நாடுகளில் மழையின் அளவும் மிக குறைவான அளவிலேயே இருக்கும். ஈராக், சிரியாவில் ஓடும் டைகரீஸ் .நதி மட்டுமே வளைகுடாவின் வடக்கே ஓடும் பெரிய நதியாகும்…

சவுதியில் நிலத்தடி நீர் என்பது கானல் நீர் போலதான் கிடைப்பது அறிதிலும் அறிது, எங்கு தோண்டினாலும் கச்சா எண்ணெய் மட்டுமே கிடைக்கும். அங்கு வசிக்கும் மக்களின் குடிநீர் மற்றும் அத்தியாவிசய தேவைக்கான தண்ணீரை அந்நாட்டு அரசே கடல் நீரையே சுத்தம் செய்து சேகரித்து வைத்து மக்கள் தேவைக்காக விநியோகித்து வருகிறது… இதற்க்காக உலகிலேயே மிக அளவில் பெரிய தண்ணீர் சேகரிக்கும் பல தொட்டிகளை கட்டி அதில் தண்ணீரை சேகரித்து வைத்துள்ளது சவுதி அரேபியா…

வளைகுடா நாடுகளில் பெரும்பாலும் மன்னர் ஆட்சிதான் நடைபெறுகிறது, ஆனால், மக்கள் திருப்தியாக வாழ்கிறார்கள். செல்வத்தில் கொழிக்கிறார்கள்… அந்நாட்டு மக்களின் தேவை உடனடியாகப் பூர்த்தி செய்யப்படுகிறது. ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டு மக்கள் பணத்தை சுரண்டும் நிலை கிடையாது…,

சவுதிஅரேபியா  மட்டுமல்லாமல் பஹ்ரைன், அமீரகம், ஓமன், ஏமன், கத்தார் போன்ற நாடுகளிலும் நிரந்தரமான ஆறுகள் ஏதும் கிடையாது எப்போதாவது மழை பெய்தால் திடீர் ஆறுகள் உருவாகும்.

ஆனால் பல நதிகளையும் பல லட்சம் ஓடைகளையும் கொண்ட இயற்க்கை வளம் அதிகம் கொண்ட நமது இந்திய நாட்டில் தண்ணீர் பஞ்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது...

பாலைவன நாடான சவுதியிலேயே தண்ணீர் பஞ்சம் ஏற்படாத போது வளமிக்க நமது நாட்டில் மட்டும் ஏன் இப்படியான நிலை

#இதற்கு_யார்_காரணம்...? 
@sure4an

வாழ்க்கை வாழ்வதற்கே


நான் அருந்தும் தேநீர் மணமா சுவையாக இருந்தால் மட்டும் போதாது...
குடிக்கும் கோப்பை வெள்ளியாக இருக்க வேண்டும் என்றாள் எப்படி?

நாம் வாழும் இந்த வாழ்க்கை வாழ்வதற்கே...
உனக்கு கிடைத்ததே சிறந்ததென எண்ணி
மன அழுத்தம் போக்கி, மன நிறைவோட வாழ பழகிக்கொள்...

மறைந்திருக்கும் நீர் அரசியல்


மறை நீர் (Virtual water) - மறைந்திருக்கும் நீர் அரசியல்
'இந்த உலகில் பலபேர் காதலிக்காமல் வாழ்ந்து இறந்திருக்கலாம்... ஆனால் நீர் இல்லாமல் மனிதர்கள் மட்டுமல்ல எந்த உயிரினமும் வாழ்ந்து விட முடியாது'

பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், நம்மில் எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?

மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம் (economy). மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.

மறை நீர் என்பது ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர்.
கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்ககிறது'' என்கிறார் ஆலன்.
ஒரு ஏ4 அளவு பேப்பர் - 11 லிட்டர் தண்ணீர்
ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் தண்ணீர் - 5 லிட்டர் தண்ணீர்
ஒரு கிளாஸ் பீர் - 74 லிட்டர் தண்ணீர்
ஒரு பர்கர் - 2500 லிட்டர் தண்ணீர்
ஒரு கிளாஸ் பால் - 208 லிட்டர் தண்ணீர்
ஒரு கிளாஸ் ஒயின் - 118 லிட்டர் தண்ணீர்
ஒரு ஜோடி காலணி - 7770 லிட்டர் தண்ணீர்
ஒரு டி ஷர்ட் - 1960 லிட்டர் தண்ணீர்
ஒரு ஜீன்ஸ் - 6660 லிட்டர் தண்ணீர்
ஒரு பார் சாக்லேட் - 2500 லிட்டர் தண்ணீர்
1.1 டன் எடையுள்ள கார் - 4 லட்சம் லிட்டர் தண்ணீர்

புத்திசாலி நாடுகள்! நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. 

சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். 

ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.

இது இந்திய நிலவரம்!
முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.
மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்.

வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.

சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும். ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.

பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.
தண்ணீரை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம்!

ஏன் உலக நாடுகள் இங்கிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். அங்கு இல்லாத தொழில் நுட்பமா, அங்கு இல்லாத வளங்களா, அங்கு இல்லாத எந்திரங்களா? பிறகு ஏன் உலக நாடுகள் இந்தியாவில் கடை போடுகின்றன. காரணம் தங்கள் வளங்களின் மீது அவர்களுக்குள்ள அக்கறை. அவற்றை பாதுகாக்க ஆரம்பித்து விட்டார்கள். மனித வளச் சுரண்டலையும், இயற்கை வளச் சுரண்டலையும் செய்ய அவர்கள் இந்தியாவைத் தேர்ந்தெடுத்துவிட்டனர். நாம்தான் வளங்களை வாரிக் கொடுப்பதில் வள்ளல்கள் ஆயிற்றே.

நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களால் இந்தியாவிற்கு கணிசமான பொருளாதார வளர்ச்சி இருந்தாலும் கூட, நாம் பொருட்களை ஏற்றுமதி செய்யவில்லை. மாறாக பொருட்களின் வழியே பல கோடி லிட்டர் தண்ணீரையே ஏற்றுமதி செய்கிறோம்.
நம் கண்ணுக்குத் தெரியாமலேயே நாமே நம் நீர் ஆதாரங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். 

தண்ணீர் அதிகம் தேவைப்படும் பெரும்பாலான பொருட்களை உலக நாடுகள் நம் நாட்டிலிருந்துதான் உற்பத்தி செய்து இறக்குமதி செய்துகொள்கின்றன. மேலும் அந்தப் பொருட்கள் இங்குள்ள எல்லோருக்குமானவையாகவும் இல்லை என்பது மற்றொரு சோகம். பணம் படைத்தவர்கள்தான் ஆடம்பரப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். தண்ணீர் திருடு போவதோ, தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதோ பெரும்பாலானோருக்கு ஒரு விஷயமாகவே தெரியவில்லை. அந்த வகையில் எளிய மக்கள் முட்டாளாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பது சோகம்.

தண்ணீருக்கு எங்கு கணக்கு?
ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.

இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.

மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.

வளர்ச்சி திட்டம்


பல வணிக நிறுவனங்கள் இலுத்து மூடப்பட்டுவிட்டது.

பல உணவகங்கள் நீர் இல்லாததால் மக்களுக்கு உணவு கொடுக்க இயலாத சூல்நிலை உருவாகியுள்ளது.

IT நிறுவனங்கள் தண்ணீர் இல்லாத காரணத்தினால் வீட்டிலிருந்து வேலை பார்க்க சொல்லிவிட்டது.

பெரிய நிறுவனங்களுக்கே கிடைக்காத நீர் வீட்டிற்க்கு எப்படி கிடைக்கும்...?

மனிதர்களே நீருக்காக இவ்வளவு திண்டாடுகிறோம். மற்ற உயிரினங்களை பற்றி சிறிது சிந்தித்து பாருங்கள்......

தாமிர தட்டுபாடை பற்றி பேசும் தலைவர்கள் தண்ணீர் தட்டுபாற்றை பற்றி பேசுவதில்லை.

வளர்ச்சி திட்டம் பற்றி பேசுபவர்கள் ஏன் வறட்சிக்கான திட்டங்க பற்றி பேசுவதில்லை ?? - சீமான்
@sure4an


விளிம்பு நிலை மனிதர்





உணவு விடுதி, பெரிய துணிக்கடை போன்ற வணிக வளாகங்களின்
வாசலில் நின்று,

மக்களை கவர ஒட்டப்ட்டிருக்கும் போஸ்டர்களையும்
அங்கு உள்ள  பொம்மைகளுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும்
விதவிதமான ஆடைகளை வேடிக்கை பார்த்து விட்டு

கடை முன்னால் நிற்காதே போ என்ற காவலாளியின் குரலுக்கும்
அவரின் கையில் உள்ள கம்புக்கும் பயந்து,

ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் கடந்து சென்றால்,
அவர் விளிம்பு நிலை மனிதர்  என்று அறிக!
@sure4an

நீர் சேகரிப்பு


மழைநீர் சேகரிப்பு என்ற ஒரு திட்டம் எல்லோருக்கும் தெரியும் பல வீடுகளில் செயல்பாட்டிலும் உள்ளது...

என்றோ ஒருநாள் பெய்யும் மழையை சேமிக்கவே ஒரு திட்டத்தை வகுத்து செயல்படுத்தி வரும் நாம். அன்றாடம் வீணாகும் தண்ணீரை சேமிக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை.

ஒவ்வொருவருடைய  வீட்டிலும் குளிக்கவும்.. பாத்திரம் கழுவவும்.. துணி துவைக்கவும் தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம். அந்த தண்ணீரை கழிவுநீர் வாய்க்காலோடு இணைத்து விடுகிறோம்.

அவ்வாறு செய்யாமல் மழை நீரை சேமிப்பது போல. அவற்றை தன் வீட்டு நிலத்திற்கு அடியிலே செல்லும்படி அமைப்பினை செய்துவிட்டால் ஒட்டு மொத்த கழிவுநீரும் குறையும்.. நிலத்தடி நீரும் காக்கப்படும்..

என்றோ வரும் மழைக்கு மழைநீர் சேகரிப்பு திட்டம்.. தினமும் கழிவாக சாக்கடையில் கலக்கும் நீருக்கு எந்த திட்டமும் இல்லை..

அரசு செய்யாது.. நாம் செய்ய முற்சித்தால் என்ன..?

இதுபோன்ற அமைப்பை உங்கள் வீடுகளில் செயல்படுதிருந்தால் comment செய்யவும் மற்றும் உங்கள் கருத்துகளையும் தெரிவிக்கவும்
நன்றி
@sure4an

பெருமை


மற்றவர்களோடு உன்னை ஒப்பிடுவது - உனக்கு
பெருமை சேர்க்காது...!!!
நீ பேசுகின்ற வார்தைகளும்...
செய்கின்ற செயல்களுமே - உனக்கு
பெருமை சேர்க்கும்...!!!
@sure4an

தமிழன் வீழ்வது ஒருசில _____களால் மட்டுமே,,,


தமிழன் வீழ்வது ஒருசில _____களால் மட்டுமே,,,
அவன் பிழைக்க சாதியை கையில் எடுப்பான்,,

#நன்றாக சிந்தியுங்கள்,,,,
ஊர் எல்லையை தான்டினால் இங்கு யாரும், யாரையும் என்ன நீ சாதி என்று கேட்கபோவதில்லை, கேட்க போவதும் இல்லை,,,
ஷேர் ஆட்டோ ஆரம்பித்து, விமானம் வரை, சாதி என்பது அழிந்து விட்ட ஓன்று.
ஒருசில சில இடங்களில் மட்டுமே ஊர் எல்லைவரை அது தொடர்கிறது,,,
இது போன்ற ஒரு சில எச்சைகள்,,,, பிச்சை காசுக்காக அனைவரிடத்திலும்,, அதை மீண்டும் பரப்பும் வேலையை செய்கின்றனர்,,,
பன்றியின் கத்தலை கல்லால் அடித்து துரத்திவிட்டு தமிழனாக ஒன்றிணைவோம்,,,
@sure4an

அன்பா இருங்க



அன்பா இருங்க தவறில்லை அந்த அன்புக்காக அடிமை ஆகிடாதீங்க.! உங்களை கண்ணீரிலேயே கரைத்துவிடும்...
@sure4an

இருக்கும்வரை இன்பமாய் இருப்போம்



பிடிக்கும் என்பதால் மீண்டும் ஒருமுறை யாரும் கருவறையில் இடம் பிடிக்க போவதுமில்லை...பிடிக்கவில்லை என்பதால் கல்லறையும் கண்டுக்காமல் விடப்போவதுமில்லை.. இருக்கும்வரை இன்பமாய் இருப்போம். இறக்கும் போது மொவுனமாய் இருப்போம்...
@sure4an