Pages

நீ அப்படி ஒன்றும் அழகில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணைல்லை
அவள் அப்படி ஒன்றும் கலர்ல்லை
ஆனால் அது ஒரு குறைல்லை
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளை படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
அவள் நாய் குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவல் இருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்த காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கை விரல் மோதிரம் தங்கமில்லை
கை பிடித்துடும் ஆசை தூங்கவில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
“எனக்கு எதுவும் இல்லை”
அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை
அந்த அக்கறை போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவளில்லாமல் சுவாசம் இல்லை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
“எனக்கு எதுவும் இல்லை”

காதல் காதல் காதல் மட்டுமே

அரிதாகவே நேர்கின்றன
உன்னை மறந்திருக்கும்
தருணங்கள்...

நீயற்ற பொழுதிலும்
கவிதை, பூ, ஓவியம்
ஏதேனும் ஒன்றிலிருந்து
நகைக்கிறாய்...

பேருந்து, திரையரங்கு, கடைவீதி என்று
எங்கேனும் ஒருத்தி
உன் சாயலில் தென்பட்டுவிடுகிறாள்...

யாரோ யாரையோ அழைக்கும்போது
என் நினைவின் வாசலில்
நீ வந்து நிற்கிறாய்...
(அது உன் பெயராக இருக்கும் பட்சத்தில்)

உன் பெயரை ஒற்றிக்கொண்டு
ஏதேனும் ஒரு வாகனம்
என்னை கடந்து செல்கிறது...

உன் பெயரில்
எங்கேனும்
ஒரு திரையரங்கு இருந்துவிடுகிறது...

உன்னை நியாபகபடுத்ததும் விதமாகவே
எல்லாம் நிகழ்கின்றன...

உன்னை சுற்றிய களைப்பில்
ஓய்வெடுக்கும் கண்களை
உறக்கத்திலும் வந்து இம்சிக்கிறாய்...

உன்னை கடந்து பயணிக்க
ஒருபோதும் முடியவே இல்லை...

முச்சறுந்த காலவெளியில்
நிகழ கூடும் என் பயணம்
உன் நினைவுகளுக்கு அப்பால்...

உனக்குப்பிடித்த எனது ஹைக்கூ.....

வெயில் சூட்டில்
உருகுது தங்கம்
என்னவள் தேகத்தில்
வியர்வை துளி..!!!!!!

காதல் வலிகள்..!!!!!!

நான் உன்னை காதலிக்கிறேன்
என்பதை தவிர எல்லாவற்றையும்
உன்னிடத்தில் சொல்லிவிட்டேன்
என்றே நினைக்கிறேன்......

நீ என்னை தானே காதலிக்கிறாய்
என்பதை தவிர எல்லாவற்றையும்
நீ என்னிடத்தில் இருந்து கேட்டு
தெரிந்து கொண்டாய் என்றும் நினைக்கிறேன்....

என் கவிதைகளை எல்லாம் நீ
படிக்கும் போது சந்தோசமாகத்தான் இருக்கிறது...

ஆனால் படித்து முடித்ததும் நீ
உன் ஒவ்வொரு கவிதைக்கு பின்னும்
யாரோ ஒரு பெண் இருக்கிறாள்
அது யாரென்று என்னிடத்திலேயே
கேட்கிறாய் எதுவுமே தெரியாதது போல்
என் முன்னால் அமர்ந்து கொண்டு.......
அது தானடி வலிக்கிறது அடி மனதில்...!!!

தோழிகளோடு ஆரவாரமாக பேசிக்கொண்டு
வரும் நீ என்னை கடக்கையில் மட்டும்
அமைதியாகி விடுகிறாயே...!!!
அதை பார்த்து தான் உறுதி செய்து கொள்கிறது
என் மனம் நீயும் என்னை காதலிக்கிறாய் என்று...

நீ என்னை கடக்கும் போதெல்லாம்
உன் கொலுசு கூட என் மீது இரக்கப்பட்டு
சில வார்த்தைகளை சிணுங்கி போகிறது
ஆனால் நீ........ ??????

ஒவ்வொரு சந்திப்பின் போதும்...
உன் புன்னகையை சிதறவிட்டு...
என் இதயத்தை அல்லவா
அள்ளிக்கொண்டு போகிறாய்.....!!!!

முற்றுப்புள்ளி வைக்காமல் தான்
முடிக்கிறேன் என் ஒவ்வொரு கவிதையையும்
உயிர் உள்ள காலம் வரை....
உன் நினைவு வற்றவா போகிறது என்னிலிருந்து.....!!!!!!

என் உயிர்க்கலந்த உறவே.....!!!!!

எண்ணங்களில் ஒரு வித விரிசல்...
என்னவென்றே புரியாத ஒரு மௌனம்....
நெஞ்சுக்குள் நெலிகிறது ஒரு சோகம்...
அதனால்தானோ என்னவோ....
இதயத்தில் ஒரு வித பாரம்......

இறக்கி வைக்க தெரியவில்லை...
யாரிடம் சொல்லவென்றும் புரியவில்லை.....
என் சோகம் பரிமாற உனையன்றி யாருமில்லை.....
ஆனால் உன்னிடமே சொல்வதற்கு
வழி ஏனோ தெரியவில்லை....

வலியோடு வருகிறேன்.....
உன் பாசமென்ற நங்கூரம் தேடி....!!!!

நாளெல்லாம் வருடிக்கொடு....
நயமாக பேசிவிடு.....
நிலை மாறிய மனதுக்கு
நீ ஒன்றே ஆறுதல்...!!!!

என் மௌனம் கலைக்கும் வித்தை
உனக்கு மட்டுமே தெரியும்..!!!!!!
என்னை மீண்டும் பழைய நிலைக்கு
கொண்டு செல்ல உன்னால் மட்டுமே முடியும்....!!!!!

சோகம் சுமந்த நெஞ்சோடும்....
கண்ணீர் சுமந்த கண்களோடும்....
உன் நிழல் தேடி வருகிறேன்......
எனக்கான அன்பு உள்ளமே.......

உன் தோள் மீது எனை சாய்த்து...!!!!!!!
சோகத்தை போக்கிவிடு.... மீண்டும் என்
வாழ்வை சுகமாக மாற்றிக்கொடு..!!!!!!

உன் அன்பான வார்த்தை கேட்டால்...
அல்லிப்பூவாய் என் முகம் மாறும்...!!!!!
ஆதரவாய் நீ பேச... என் அத்துனை
துன்பமும் அகன்றோடும்..!!!!!

அந்த ஒரு நம்பிக்கையிலே...
உன் அன்பை தேடிவரும்...
உன்னை புரிந்து கொண்ட ஜீவன் இது...!!!!!!!!

உன் நினைவிலும், உனக்காகவும் சில வரிகள்....!!!!!!

உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட..
என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை
என்னை, ஏனென்றால் உன்னை காதலிக்க
எனக்கு பிடித்திருப்பதால்...!!!!!!


நீ காதல் செய்ய மறுப்பதால் எனக்கும் கூடத்தான்
கவிதை எழுத பிடிக்கவில்லை....
ஆனாலும் தொடர்கிறேன் ஏனென்றால்..
என் கவிதைகள் எல்லாம் உனக்கு பிடிப்பதால்....!!!!


பெரிதாக ஒன்றும் சிந்திப்பதில்லை நான்
எந்தக்கவிதை எழுத தொடங்கும் போதும்...
ஆனால் எழுதி முடித்து பார்க்கையில்
ஒரு சிறப்பான கவிதைக்குரிய சாயலிலே
முடிகிறது என் எல்லாக் கவிதையும்....


எப்படி சிறப்பு பெறாமல் இருக்கும்?? என்
எண்ணம் எல்லாம் வண்ணம் பூசி
உலா வரும் தேவதை நீயாக இருக்கையில்..!!!!


என் கவிதைகளை படித்தவர்களில்
பெரும்பாலோனோர் சொல்கிறார்கள்
என் கவிதைகளில் ஏதோ ஒரு வித
வித்தியாசத்தை உணர்வதாக....!!!!!


அவர்கள் சொல்வதும் உண்மைதான்
இருக்கலாம் இல்லை என்றால் வித்தியாசமான
உன்னை காதலியாய் தேர்வு செய்திருப்பேனா..???


ஒரு வித்தியாசத்திற்கு இன்று நீ ஒரு கவிதை
சொல் எனக்காக பார்க்கலாம்..
என்று நான் சொல்கையில்....
மெல்ல சிணுங்கி மெலிதாய் சிரித்தவாறே..
சொன்னாயே எனக்கும் சேர்த்து நீயே சொல்லிவிடேன்
என்று செல்லமாக கெஞ்சி..!!!


அந்த சிணுங்கலிலும், கெஞ்சலிலும் இருந்து தானடி
ஆரம்பமாகிறது என் அடுத்த கவிதைக்கான முதல்வரி...!!!!!!

காதல்(லி) அழகு தொகுப்பிலிருந்து...!!!!!!

தேவதையே...
தலைக்குக் குளித்துவிட்டு
கூந்தல் உலர்த்த மொட்டை மாடி
போகாதே என்றால் கேட்கிறாயா......
அங்கு பார் வான் மேகமெல்லாம்
ஈடு கொடுக்க முடியாமல்
எப்படி கலைந்து போகிறதென்று..!!!!!!

பூமகளே..
பூப்பறிக்க சென்ற நீ
மல்லிகையை மட்டும்
பறித்து விட்டு, திரும்பி விட்டாயாம்.....
அங்கு பார் ரோஜாக்களெல்லாம்.....
சோகத்தில் எப்படி சிவந்து கிடக்கிறதென்று..!!!!!

புன்னகை பூவே,
உன் வீட்டு மழலைக்கு
சோறூட்ட வெளியில் வந்து நீ
நிலவை புன்னகைத்தபடி
அழைக்காதே என்றால் கேட்கிறாயா....
அங்கு பார் உன் புன்னகைக்கு
ஈடு கொடுக்க முடியாமல் நிலவு மேகத்துக்குள்
மறைந்து கொண்டு முகம் காட்ட அஞ்சுவதை...!!!!!

மஞ்சள் நிலவே,
பனி விழும்...
மார்கழிக் காலையில் வாசல் தெளித்து
நீ போட்ட மாக்கோலம்...
உன் விரல் தொட்ட ஸ்பரிசத்திற்காகவா
இப்படி சிரிக்கிறது இந்த விடிந்த விட்ட காலையில்..!!!!

பொன் ரதமே...
நீ காலணி அணிந்து நடப்பதால்...
உன் மலர் பாதங்களை தாங்க முடியாத....
ஏக்கத்தில் இப்பூமி எப்படி கொதித்துப்போய்
கிடக்குது பார்..!!!!

புத்தம் புது தென்றலே...
புடவை கட்டி நீ கோவிலுக்கு போகும்
ஒவ்வொரு நாளும் குழம்பிப்போகிறார்கள்
பூசாரி முதல் பக்தர்கள் வரை அனைவரும்
உள்ளிருப்பது அம்மனா....!!! இல்லை
வழிபடும் நீ அம்மனா என்று....!!!!!

காதல் கண்மணியே..!!!!

என்னுடைய கற்பனையோடு
கைகோர்க்கும்.. உன்னுடைய
சின்னச்சின்ன நினைவுகளும்...
கவிதை என்ற அந்தஸ்தை
மிக இயல்பாய் பெற்று விடுகிறது...!!!!

நிறைய நிறைய சிந்தித்தாலும் கூட
நிறைவாய் ஒரு கவிதை உனக்கு
கொடுக்க முடியவில்லை என்ற
ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது
ஒவ்வொரு கவிதை எழுதி முடிக்கையிலும்..!!!!

எத்தனை கவிதை சொன்னாலும்
நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்
சொல்வது நீ என்றால்
என்று நீ என்றோ சொன்ன வார்த்தைதான்
இன்று வரையில் நிரப்பி கொண்டிருக்கிறது
என் டைரியின் பக்கங்களை..!!!!!

இன்றைய எனக்கான கவிதை எங்கே
என்று கேட்ட உன்னிடம்,
இல்லை என்று சொல்லிவிட்டு..
சற்று நேரம் கழித்து கொடுத்த கவிதைக்கு
நீ திட்டிக்கொண்டே கொடுத்த பாராட்டுதான்
தித்திப்பாய் இனிக்கிறது....
இன்று வரையில் என் இதயத்தில்..!!!!

சிந்திக்காமல் ஆரமித்து
சிறப்பாக முடிக்கப்படும் கவிதைகளுக்கு
இடையே வழிகாட்டி அழைத்துவந்த
உன் நினைவுகளை கலங்கரை விளக்கிற்கு
மேலாக ஒப்பிட்டாலும் தப்பில்லையடி...!!!!!!

காதல் வேண்டுகோள்..!!!!

உன் இமைக்குளத்தில்.....
நீந்திக் கொண்டிருக்கும்
இரு மீன்களோடு...
விளையாட என் இதயத்தையும்
அனுப்புகிறேன்... மூழ்கிப்போகாமல்
பார்த்துக்கொள்..!!!!

அவள் இப்படித்தான் ....!!!!

மிதக்கும் மேகம் கொண்டு
உருவாக்கிய சிற்பமா..
இல்லை இவள் பெண் என்ற பெயரில்
பூமிக்கு வந்த சொர்க்கமா.!!!
அழகு புதையல் கொட்டி கிடக்கும்
அட்சயபாத்திரம்... ஆண்களே !!!
இவளை கடக்கையில் இதயம் பத்திரம்....
நடை அழகு, உடை அழகு...
நான் பார்த்த இந்த பெண் அழகு.!!
விழி அழகு, மொழி அழகு .!!!
விருப்பமான உந்தன் பேச்சு அழகு ...
கருப்பு கூந்தல் காட்டினிலே
கவர்ச்சியான ரோஜா அழகு...!!!
வளமான சந்தனமும்...
வார்த்தெடுத்த குங்குமமும்...
முறையாக கலந்தது போல்
செழித்திருக்கும் உன் உடலழகு..!!!
பவழங்களை சேர்த்தெடுத்து
பார்குடத்தில் நனைத்தது போல்
பாவை உந்தன் பற்க்கலடி..!!!!
கேட்க்கும் இதயம் விரும்பும்
உந்தன் சொற்க்கலடி.!!!
பூமியில் பூத்த வெண்ணிலவு ..
உன்னழகை பார்த்து தேயும்
அந்த வானிலவு..!!!!!!




பாறை யாக்கி வைத்திருந்த..
என் இதயத்தை மெல்ல
பதம் பார்த்தவள் ...

பாலை விட வெண்மையான
மனம் படைத்தவள்....

இனிக்க இனிக்க பேசும்
இனியவள்...

நான் அறியா காதல் பாடம்
கற்று தந்தவள்...!!!!

நான் உன்னை காதலிக்கிறேன்..
என்று என்னிடத்தில் சொல்லாமலே...
என்னை காதலிக்க வைத்தவள்...

என் அன்பு காதலி..!!!!!