Pages

sureSH's Birthday Calendar

Hi

I am creating a birthday calendar of all my friends and family. Can you please click on the link below to enter your birthday for me?

http://www.birthdayalarm.com/bd2/85586644a252847371b1527513648c92872468d1386

Thanks,
sureSH

மழைக் காதல்..

நீ குடை விரிப்பதற்குள்
உன்னை தொட்டு விட்ட
மழைத்துளிகளை பார்த்து,
இன்னும் கறுத்தது வானம்,
என் முகமும் தான்..
- sure

அமாவாசை அறியாச் சிறுமி..

அமாவாசை அறியாச் சிறுமி..
நிலவுத் தொலைந்துவிட்டதா?
எப்படி தொலைந்திருக்கும்?
நேற்றுக் கூட பார்த்தேனே?
நல்லாத் தானே இருந்தது?
யாருடனாவது சண்டையோ?
தனிக்கட்டை யாரோடு சண்டையிடும்?
நட்சத்திரங்கள் வம்பிழுத்திருக்குமோ?
நாலாப்பக்கத்திலும் இல்லையே?
கீழக் குதித்துத் தற்கொலை பண்ணியிருக்குமோ?
நாளிதழில் செய்தி வருமோ?
நிலவுக்கு என்னாச்சோ?
யாருமே கவலைப்படலையே?
அம்மா அடுப்படிக்குள்ளேயே?
அப்பா அலுவலகத்திலேயே?
நிலவு கண்ணாமூச்சி காட்டுதோ?
நாளைக்கு வந்திருமோ?
காத்திருக்கிறேன்..
- sure

இடமாற்றம்.

பசி வயிற்றை கிள்ளவில்லை,
பேருந்தில் இடையைக் கிள்ளியது..

கொடூரனின் காமப்பசி!

- sure

போனப் பின் ஏது?

அவன் பையில் ஒரு ரூபாய்!
எல்லோருக்கும், அவன் செல்லாக் காசு..

பிணத்தின் நெற்றியில் ஒரு ரூபாய்,
அத்தோடு, செல்லும் காசு..
- sure

நிறைவு..

என் நோட்டுப் புத்தகத்தில்
பலக் கவிதைகள்
முடித்தும்,
முடிவுப் பெறாமலே..
நீ ஒரு முறையாவது
படித்தால் தானே,
என் கவிதைக் கூட
"நிறைவு" பெறும்....
- sure

நான் யாரெனில்?

தினம் தினம் அவமானப்படுவேன்.
சுற்றத்தார் சுமத்தும் பழிகளை,
சுமைத் தாங்கியாய் சுமப்பேன்.
கணவன் கள்ளத்தொடர்பைக் கூட,
கண்ணியமாய் ஆதரிப்பேன்.
மாமியார் கொடுமைகளை
கண்ணீருடன் பெறுவேன்.
நாத்தனாரின் நடத்தையைக் கண்டு
உள்ளம் பொங்கி அழுவேன்.
குழந்தைகளுக்காகவே குமுறலுடன்
காலம் கழிப்பேன்.
ஒருநாள் வேறு வழியின்றி,
பொங்கி எழுவேன்.
வீட்டை விட்டு வெளியேறி,
கைநிறைய காசு பார்ப்பேன்.
கார், பங்களா எல்லாம்
கலர் கலராய் சொந்தமாக்குவேன்.
கணவனே வந்து காலடியில்
விழும்படி செய்வேன்.
நான் யாரெனில்,
பெண்களே கொஞ்சம் கண்ணீரை
துடைத்து விட்டு பாருங்கள்..
நானே,

"உம் சீரியல் நாயகி"!!!!!!!!!!!!
- sure
இனி
இழப்பதற்கு ஒன்றும் இல்லை
என்னையும் !
உன்னை பாராட்ட
தேடி அலையும் என் உள்ளதையும் தவிர !

தோழி

நேற்றுவரை எனக்கான மழை!
நீ போட்ட கவிதை விதையோ ! தோழி !!!
இன்று முதல்
இந்த கலை மழைக்கும் மட்டும் காதலன் இல்லை
தோழி நீ எழுதிய வரிகளுக்கும்
எழுத போகும் வரிகளுக்கும்
இந்த காதலன்....
உன் காதல் யாரிடமோ !
ஆனால் ? இந்த மழைக்காதலன் உன் ஒவ்வொரு வரிகளினுளும் ....

என் குருநாதர் " வைரமுத்து " அவர்களின் கவிதைக்கு அடுத்தபடி நான் மிகவும் ரசித்த கவிதைகள் உன் வரிகளடி தோழி !

இனி வரும் நாளில்
உன்சாயல் கவிதைகள் கூட வரும்
கலையின் மழைகாதல் வலையில்

மறவாமல் வந்து வாசித்து போ தோழி ....
இல்லையென்றால் என் வரிகள்
வாசனை இழந்து போகுமடி தோழி....
ஒரு முறை நின்று வாசி
இல்லையென்றால் உயிர் இழந்து போகும் !

உனக்கான வாயில் படி

நாணயத்திற்கு மட்டும் நாணயமானவர்..

செல்லும் பாதையில்,
நாணயம் ஜொலிஜொலிக்க..
கண்டும் காணாமல் நான்!
என் "நாணயதைக்" காப்பாற்றி..

அதே பாதையில்
கத்தையாய் நோட்டு,
சில்லறையாகிப் போனது
என் "நாணயம்"!!!
- sure